சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா ஜூலை 28ஆம் தேதி ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும்; இந்நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.
44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28.7.2022 முதல் 10.8.2022 வரை தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட உள்ளது. ஒலிம்பியாட் தொடரில் 187 நாடுகள் பதிவு செய்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் தொடர்பான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.