தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"4 நாட்களுக்கு மிதமான மழை" எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - today weather

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

By

Published : May 24, 2023, 2:42 PM IST

சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மே 24 முதல் மே 26 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்து உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பாக, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை ஆக 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை ஆக 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மடத்துக் குளம் (திருப்பூர்), கெலவரப் பள்ளி அணை (கிருஷ்ணகிரி), நம்பியூர் (ஈரோடு) தலா 3 செ.மீ மழையும்,

ஓசூர் (கிருஷ்ணகிரி), வால் பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), திரு மூர்த்தி அணை (திருப்பூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), சின்ன கல்லாறு (கோயம்புத்தூர்), பார்வூட் (நீலகிரி), உதகை (நீலகிரி) தலா 2 செ.மீ மழையும், சோத்துப் பாறை (தேனி), தாளவாடி (ஈரோடு), பெரிய குளம் AWS (தேனி), பெரியார் (தேனி), பெரிய குளம் (தேனி), உடுமலைப் பேட்டை (திருப்பூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி), மேட்டுப் பாளையம் (கோயம்புத்தூர்), ஆனைமடுவு அணை (சேலம்) உள்ளிட்ட இடங்களில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக மே 26 ஆம் தேதி முதல் மே 28 ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகளான, மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் இலட்சத் தீவு போன்ற பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேலும், மே 27 மற்றும் மே 28 ஆகிய தேதிகளில் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் மீன் பிடிக்க இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாகவும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:வறண்ட குற்றாலம் அருவி.. பாறைகளில் மறைந்திருந்த சிலைகள்.. வைரலாகும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details