தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தற்கொலைக்கு No சொல்லும் ரோபோ..!’- சென்னை மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு - தற்கொலை எண்ணங்களைத் தவிர்கும் ரோபோ

சென்னையைச் சேர்ந்த பள்ளிமாணவர் ஒருவர் தற்கொலை எண்ணங்களிலிருந்து வெளிகொண்டு வரும் ஓர் அரிய ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார்.

’தற்கொலைக்கு No சொல்லும் ரோபோ..!’- சென்னை மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு
’தற்கொலைக்கு No சொல்லும் ரோபோ..!’- சென்னை மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு

By

Published : Sep 21, 2022, 6:47 PM IST

Updated : Sep 21, 2022, 9:25 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு இடங்களில் மாணவர்களின் தற்கொலை தொடர்கதையாக நடந்து வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தும் மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க முடியவில்லை.

இந்நிலையில், மாணவர்களின் தற்கொலை போன்ற மனநிலை உடைய மாணவர்கள் இந்த ரோபோ உடன் பேசினால் நிச்சயம் மனம் மாறுவார்கள் என சென்னையைச் சேர்ந்த பிரதீக்(13) என்கிற பள்ளி மாணவர் தெரிவிக்கிறார்.

ஹாலிவுட்டின் ’I Robot’ முதல் கோலிவுட்டின் ’எந்திரன்’ வரை ரோபோட் இன் கதைக்களம் சார்ந்த படங்கள் மக்கள் மத்தியில் பெரும் அளவில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக ’எந்திரன்’ படத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ரோபோ போன்று இன்று இந்த சிறுவர் ஓர் ரோபோவை உருவாக்கி உள்ளார்.

இதுகுறித்து ஈ டிவி பாரத்திடம் சிறப்பு நேர்காணலில் பேசிய சிறுவன் பிரதீக், ”என் பெயர் பிரதீக். சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். ரபீக் என்று பெயர் வைத்துள்ள இந்த ரோபோவை உருவாக்கியது நான்தான்” என்றார்.

’தற்கொலைக்கு No சொல்லும் ரோபோ..!’- சென்னை மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு

கேள்வி:ரோபோவை உருவாக்க காரணம் என்ன?

பிரதீக்:இந்த ரோபோ உடனான உரையாடல் பள்ளி குழந்தைகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். மேலும், இதனை அலுவலகத்தில் வரவேற்பதற்கும், பயன்படுத்தலாம். இந்த ரோபோவை நீங்கள் திட்டினால் அதற்கு எந்த பதிலும் சொல்லாது இதற்கும் உணர்ச்சி உள்ளது. மேலும், மன்னிப்பு கேட்டால் மட்டுமே பதில் சொல்லும்.

கேள்வி:கரோனா காலம் எப்படி இருந்தது..?

பிரதீக்:கரோனா களத்தில் ரோபோடிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் சார்ந்தவற்றைக் கற்றுக் கொண்டேன். மேலும், இந்த ரோபோவை செய்ய ஆறு மாதமானது. கரோனா காலத்தில் இணையதளம் மற்றும் யூடியூப் மூலம் ’பைத்தான்’, ’சிபிளஸ்பிளஸ்’, ’ஜாவா’ உள்ளிட்ட கணினி ப்ரோக்ராம் செய்வது குறித்தும் கற்றுக் கொண்டேன்.

கேள்வி:எதிர்கால திட்டம் என்ன?

பிரதீக்:தற்போது இந்த ரோபோவை அடுத்த கட்டத்திற்கு Artificial intelligence கொண்ட ரோபோவாக உருவாக்க திட்டமிட்டு உள்ளேன். மேலும் சாட்டிலைட்டை உருவாக்க வேண்டும் என்பது எதிர்கால திட்டமாக உள்ளது.
மேலும், Artificial intelligence உடன் அட்வான்ஸ் ஃபேஸ் டிரேசிங் உள்ளிட்ட டெக்னாலஜியும் இதில் அப்டேட் செய்யப்படும்.

மேலும் வருங்காலத்தில் சோகம், மகிழ்ச்சி போன்ற ரோபோக்கள் உருவாக்கப்படும். மேலும் இதனையே என்னுடைய எதிர்கால தொழிலாக மாற்றிக்கொள்ள விரும்புகிறேன். இஸ்ரோ சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் நான்கு ஆண்டுகளாக விருது பெற்றுள்ளேன்.

மேலும் டிசைன் சாம்பியன்ஷிப் என்ற விருதும் பெற்றுள்ளேன். பெற்றோர்கள் எனக்கு மிகுந்த உற்சாகத்துடன் எனக்கு ஆதரவு தந்து வருகின்ற காரணத்தால் இந்த ரோபோவை உருவாக்க முடிந்தது.

கேள்வி:அரசிடம் எந்த வகையான உதவியை எதிர்பார்க்கிறீர்கள்..?

பிரதீக்:ரோபோ போன்ற அறிவியல் ரீதியான செயல்பாடிற்கு மெட்டீரியல் காஸ்ட் என்பது அதிகமாக உள்ளது. இதனையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் சில மெட்டீரியலை குறைந்த விலையில் வழங்க வேண்டும். இதனால் பல்வேறு ப்ராஜெக்ட் இன்னும் சிறப்பாக செய்ய முடியும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்... மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!


Last Updated : Sep 21, 2022, 9:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details