இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, நேற்று தென்தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. இதைதொடர்ந்து இன்றும் சூறைக்காற்றுடன் கூடிய மழை இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கான சூழல் மாறியுள்ளது.
தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம். கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகம் இருக்கும். உள் தமிழ்நாட்டிலும் இன்று இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகம் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி, கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் தலா 4 செ.மீட்டரும், உதகை, பரமக்குடி, கன்னியாகுமாரி மாவட்டம், குழித்துறை ஆகிய இடங்களில் 2 செ.மீ மழையும் பெய்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும், வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 28டிகிரி செல்சியஸும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.