சென்னை: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் கமிஷனர் காலணியை சேர்ந்தவர் அலாவுதீன்(38). இவருடைய மனைவி சுனிதா கடந்த சில நாட்களாக சுனிதா சந்தேக அடிப்படையில் அலாவுதீனுடன் சண்டை போட்டதாக கூறப்படுகிறது.
நேற்று வீட்டில் இருந்த மனைவி சுனிதா டியூசனில் இருந்த மகனை அழைத்து வருவதற்காக சென்று விட்டு வீடு திரும்பிய போது அலாவுதீன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து மனைவி சுனிதா சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு பிறகு பிரேதம் ஓப்படைக்கப்பட்டு இறுதி சடங்கும் நடந்தேறியது.
மனைவி சந்தேகபட்டதால் செல்போனில் வீடியோ வாக்குமூலம் அளித்து கார் ஓட்டுனர் தற்கொலை!! இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட அலாவுதீன் செல்போனை சோதனை செய்த போலீசார் அவர் தற்கொலை செய்யும் முன்னர் தனது செல்போனில் தன் சாவுக்கு காரணம் 14 ஆண்டுகளாக பணிபுரிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் தான் என வீடியோ பதிவிட்டுள்ளார்.
மேலும் அதே மருத்துவமனையில் பணி செய்யும் பெண் ஒருவருடன் தொடர்புப்படுத்தி தன் மனைவிக்கு தெரிய வைத்து அதன் மூலமாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரித்தபோது காவல் ஆய்வாளர் தரக்குறைவாக பேசியதாகவும் கூறியுள்ளார்.
அதுபோல் மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் பிரவுன் தாஸ் மற்றும் சக பெண் ஊழியர்கள் பெயரை பதிவு செய்து அவர்கள் தான் காரணம் என வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெரியார் சிலை உடைப்பு குறித்து பேசிய வழக்கு - கனல் கண்ணனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!