சென்னை திருவல்லிக்கேணி சுபத்ரால் தெருவைச் சேர்ந்தவர், டோளா ராம். இவர் இருசக்கர வாகன உதிரி பாகக் கடை நடத்தி வருகின்றார். இவரது மகன் தேவேந்திரன்(14) 9ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் வழக்கம்போல் நேற்று (அக்.8) டியூசனுக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் தேவேந்திரனின் செல்போன் எண்ணில் இருந்து அவரது தந்தை டோளா ராமிற்கு அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 'உனது மகனை கடத்தி விட்டதாகவும், 10 லட்சம் ரூபாய் பணம் தரவில்லையென்றால் கொன்று விடுவோம்' என டோளா ராமை மிரட்டியுள்ளனர். இதனைக் கேட்டு டோளா ராம் பதற்றமடைந்தார். மீண்டும் சிறிதும் நேரம் கழித்து இவரைத் தொடர்புகொண்டு பேசிய சிறுவன், தன்னை ஒரு கும்பல் கடத்தி சேப்பாக்கம் ஸ்டேடியம் புலூ கேட் அருகே இறக்கிவிட்டுச் சென்றதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து, அண்ணாசாலை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் சிறுவனை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுவன் ஆட்டோவில் சென்றது தெரியவந்தது. ஆட்டோ எண்ணை வைத்து ஆட்டோ ஓட்டுநரைக் கண்டுபிடித்து விசாரித்தபோது, தேவேந்திரனுடன் அவரது நண்பன் மட்டும் ஆட்டோவில் ஒன்றாக வந்து சேப்பாக்கம் பகுதியில் இறங்கியதாகத் தெரிவித்தார்.