தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இனி எந்த தேர்தலிலும் பாஜக வெற்றி பெறாது' - கி. வீரமணி - Dravidar Kazhagam pay tribute to periyar

சென்னை: மக்களுடைய உணர்வுகளை மதிக்காமல் பாசிச போக்கினை கடைபிடிக்கும் பாஜக இனி வரும் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

எந்த தேர்தலிலும் பாஜக வெற்றி பெறாது  பெரியார் நினைவு நாள்  பெரியார் நினைவு நாள் திராவிடர் கழகம்  கி. வீரமணி  Dravidar Kazhagam pay tribute to periyar  periyar memorial day
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது அமித்ஷாவின் அரசியலுக்கு கிடைத்த மரண அடி

By

Published : Dec 24, 2019, 6:19 PM IST

தந்தை பெரியாரின் 46 ஆவது நினைவு நாளான இன்று சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி மரியாதை செலுத்தினார்.பின்னர் திராவிடர் கழகத்தினர் சிம்சனிலிருந்து வேப்பேரியில் உள்ள தந்தைப் பெரியார் திடல் வரை பேரணியாக நடந்து சென்றனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கி. வீரமணி, தந்தை பெரியாரின் கொள்கைகள் தற்போது தான் அகில உலகத்திலும் பரவி வருகிறது. வட மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு பெரியாரின் கொள்கைகள் மருந்தாக அமைந்துள்ளது.

மனிதநேயத்தை விரும்புவர்களுக்கு தந்தை பெரியார் விடியல் ஆகவும், அம்பேத்கர் தீர்வாகவும் இருக்கின்றனர். ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவியிருப்பது அமித்ஷாவின் அரசியலுக்கு கிடைத்த மிகப்பெரிய மரண அடி. ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழும் மலைவாழ் மக்கள் பாஜகவை சரியாகப் புரிந்து கொண்டு, இங்கே உங்களது பம்மாத்து வேலை பலிக்காது என்று தெளிவாக தீர்ப்பளித்துள்ளனர்.

பெரியார் முன்பைவிட இப்போது அதிகம் தேவைப்படுகிறார்

மத்தியில் உள்ள பாஜக 37.8 விழுக்காடு வாக்கு பெற்று தான் வெற்றி பெற்றார்கள் மீதமுள்ள அனைவரும் எதிராகத்தான் இருந்தார்கள். மக்களுடையை உணர்வுகளை மதிக்காமல் பாசிச போக்கினை செயல்படுத்துவதால் அமித்ஷா, மோடிக்கு மரண அடி விழுந்துள்ளது.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது அமித்ஷாவின் அரசியலுக்கு கிடைத்த மரண அடி

இனி வரும் எந்த தேர்தலிலும் பாஜக வெற்றி பெறாது. தேசிய குடிமக்கள் பதிவேடு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது பிரிவிற்கு எதிரானது" என்றார்.

இதையும் படிங்க: தந்தை பெரியார் 46ஆவது நினைவு நாள்: ஸ்டாலின் மரியாதை!

ABOUT THE AUTHOR

...view details