சென்னை : தமிழ்நாடு பாஜக வழக்கறிஞர் பிரிவின் மாநில செயற்குழு கூட்டம் அப்பிரிவின் தலைவர் பால் கனகராஜ் தலைமையில் பூவிருந்தவல்லியை அடுத்த குமணன்சாவடியில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், நான்கு பாஜக எம்.எல்.ஏ.,க்கள் வெற்றிப் பெற்ற தொகுதியில் சிறப்பாக பணியாற்றிய வழக்கறிஞர்களுக்கு கேடயம் வழங்கி, வழக்கறிஞர் பிரிவுக்கான தனி சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார்.
இக்கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இக்கூட்டத்தில் பேசும்போது, ”சமுதாயத்தில் நெருக்கமாக பழக்கக்கூடிய வாய்ப்பு வழக்கறிஞர்களுக்கு உண்டு. வழக்கறிஞர்களுக்கும்,அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாட்டில் பல முக்கிய பதவிகளில் வழக்கறிஞர்கள் இருந்துள்ளனர்.