சென்னை:நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தப்படுவதால் விபத்து காலங்களில் 'ஏர் பேக்' (air bag) செயல்பட முடியாத நிலை ஏற்படுவதாகவும், மேலும் எதிரில் வரும் வாகனம் மற்றும் பொதுமக்களுக்கும் கடுமையான சேதம் ஏற்படுகிறது எனவும் கூறி மத்திய அரசு பம்பர் பொருத்தத் தடை விதித்தது.
மத்திய அரசின் தடையை மீறி நான்கு சக்கர வாகனங்களில், பம்பர்கள் பொருத்தப்படுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் லெனின் பால் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பொதுமக்கள் மட்டுமல்லாமல் அமைச்சர்கள், உயர் அலுவலர்களின் வாகனங்களில் கூட தடைசெய்யப்பட்ட பம்பர்கள் பொருத்தப்படுவதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, போக்குவரத்து ஆணையரக அலுவலர்கள் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் பொருத்திய பம்பர்களை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்திருந்தனர்.
மக்களின் பாதுகாப்பு அவசியம் -தடை விதிக்க மறுப்பு
இந்தநிலையில், மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செப்.21) விசாரணைக்கு வந்தது.