தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Audio Leak... சாதிவெறியைத் தூண்டும் வகையில் பேசிய பச்சையப்பன் கல்லூரி தமிழ்துறைத்தலைவர் - caste decrimination at pachayappan college

சாதிப்பெயரை வைத்து மாணவர்களின் தரத்தை மதிப்பிடும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவரின் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சாதிய தீண்டாமை.., வைரலான ஆடியோ..!
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சாதிய தீண்டாமை.., வைரலான ஆடியோ..!

By

Published : Aug 19, 2022, 6:55 PM IST

சென்னை:பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வருபவர், அனுராதா. இவர் தனது துறை மாணவர்களிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோவில் சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தும் விதமாகப் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

அந்தப்பதிவில், 'முகத்தைப் பார்த்தாலே BC-யா? MBC-யா அல்லது SC-யா எனத்தெரிந்துவிடும் . நீ என்ன கம்யூனிட்டி என்பது கூட எனக்கு தெரியாது. நீ என்ன கம்யூனிட்டி?’ என்று கேட்டு தமிழ்த்துறை மாணவர்களின் குறிப்பிட்ட சிலரின் பெயரை உச்சரித்து கம்யூனிட்டி குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது மாணவர்கள் இடத்தில் சாதியப்பாகுபாடுகளை உண்டாக்கும் நோக்கில் தமிழ்த்துறைத்தலைவர் அனுராதா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ’வகுப்பறையில் வீடியோ எடுத்தது யார் எனக் கேள்வி எழுப்பியதுடன், தொடர்ந்து நன்றாகப் படித்து தேர்வு எழுது’ எனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

கடந்த ஆண்டும் சாதியப்பாகுபாடு ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்த்துறைத்தலைவர் அனுராதா ஈடுபட்டதாகவும் அவருக்கு காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பா கல்லூரிக்கு பணிமாற்றம் செய்ததும் தற்போது தெரியவந்துள்ளது. மேலும், நீதிமன்றத்தில் தடைபெற்று சென்னை பச்சையப்பன் கல்லூரியிலேயே பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் குறித்து பச்சையப்பன் கல்லூரி முதல்வர் கஸ்தூரியிடம் விளக்கம் கேட்டபோது, 'வரும் திங்கட்கிழமையன்று(ஆக.22) ஒழுங்கு நடவடிக்கை குழு பேராசிரியை அனுராதாவிடம் விசாரணை நடத்த இருக்கிறது. இதனைத்தொடர்ந்து அவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்று கல்லூரி முதல்வர் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சாதிய தீண்டாமை.., வைரலான ஆடியோ..!

இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய பச்சையப்பன் கல்லூரி முதல்வர் இவருடைய செயல்பாடுகளை குறிப்பிட்டு அனுப்பியது தற்போது தெரியவந்துள்ளது. உடன் பணியாற்றும் பேராசிரியர்களையும் சாதிய கண்ணோட்டத்துடன் இவர் அணுகிய தகவல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இதையும் படிங்க: இனிமேல் வளையோசை... பாட்டு கமல் மாதிரி பண்ண முடியாது... அரசின் புதிய விதிமுறைகள் என்னென்ன...?

ABOUT THE AUTHOR

...view details