சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர்.
அதில், “எனது தந்தையும் நடிகருமான சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், அவருக்குச் சொந்தமான 270 கோடி ரூபாய் சொத்துகளை முறையாக நிர்வகிக்கவில்லை. வீடுகளின் வாடகை பங்கை எங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியுள்ளனர்.
அதேநேரம் சொத்துகளில் எங்களுக்கும் பங்கு இருக்கிறது. தங்களுக்கு உரிய பங்கை பிரித்துத்தர உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சாந்தி மற்றும் ராஜ்வி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உமா சங்கர், “சொத்துகளைப் பிரித்து கொடுப்பதில் ராம்குமார் மற்றும் பிரபு ஆகியோர் நேர்மையாக செயல்படவில்லை.