தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக தொடரும் சோதனை! - DMK MP Jagathrakshakan

The 3rd day of the IT raid: முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 11:35 AM IST

சென்னை:வரிஏய்ப்பு புகாரின் அடிப்படையில், முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைய முன் தினம் (அக்.5) தொடங்கிய இந்த வருமான வரித்துறையினரின் சோதனை, தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தொடர்கிறது.

மேலும், எம்பி ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:“காவிரி விவகாரத்தில் திமுக-காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது” - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details