சென்னை: இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) சார்பில் நடக்கும் 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நாளை (டிச.14) தொடங்கி, இம்மாதம் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் 2003ஆம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவானது நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, திரையிடப்படும். இதில் தேர்வாகும் சிறந்த படங்களுக்கு, சிறப்பு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 21வது சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதன் துவக்க நிகழ்ச்சியானது, ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நாளை நடைபெற உள்ளது. சர்வதேச திரைப்பட விழாவிற்காக 57 நாடுகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட படங்கள் அனுப்பப்பட்டிருந்தன. அதிலிருந்து ஜூரி மூலம் சிறந்த 126 படங்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக, 25 தமிழ்ப் படங்கள் அனுப்பப்பட்டிருந்த நிலையில், சிறந்த 12 படங்கள் தேர்வாகியுள்ளன.
உலக சினிமாவில் 12 படங்களும், இந்திய பனோரமாவில் 19 படங்களும் திரையிடப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், உலக சினிமாவில் தேர்வான 12 படங்களில் 2 படங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை. தமிழ் சினிமாவில் இருந்து தேர்வான 12 படங்களிலிருந்து சிறந்ததாகத் தேர்வு செய்யப்படும் முதல் 3 படங்களுக்கு ரூபாய் 7 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளதாகக் கூறியுள்ளனர். உலக சினிமாவில் தேர்வாகும் சிறந்த 3 படங்களுக்குக் கோப்பை, சான்றிதழ் என மொத்தம் 9 பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.
போட்டிப் பிரிவில் திரையிட தேர்வான 12 தமிழ் படங்கள்:
1. வசந்தபாலனின் 'அநீதி'
2. மந்திரமூர்த்தியின் 'அயோத்தி'
3. தங்கர் பச்சானின் 'கருமேகங்கள் கலைகின்றன'
4. மாரி செல்வராஜின் 'மாமன்னன்'