அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் பெயர் நாளை (அக்.07) அறிவிக்கப்படும் நிலையில், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தனித்தனியே தங்களது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களான அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனிசாமி, வைத்தியலிங்கம், அதிமுக அமைப்புச் செயலாளர்களான நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், தேனி மாவட்டச் செயலாளர் சையத் அலிகான், ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமாரும் உடனிருந்தார். இச்சந்திப்பு நிறைவடைந்தபின், அங்குசென்ற அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், தங்கமணி ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு ஆலோசனை நடத்துவதற்காக கிளம்பிச் சென்றனர்.
இதற்கிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் காலையிலேயே ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நிலக்கரி சுரங்க முறைகேடு: முன்னாள் மத்திய அமைச்சர் குற்றவாளி