தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டுமான பொருள்களின் விலையைக் குறைக்கத் தொடர் நடவடிக்கை - தங்கம் தென்னரசு - Thangam Thennarasu

கட்டுமான பொருள்களின் விலையைக் குறைக்கத் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

thangam thennarsu
தங்கம் தென்னரசு

By

Published : Jun 22, 2021, 2:13 PM IST

சென்னை: கலைவாணர் அரங்கில் இரண்டாம் நாள் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அப்போது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், "தமிழ்நாட்டில் தற்போது சிமெண்ட் விலை, கட்டுமான பொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது" என்று குற்றஞ்சாட்டினார்.

இதற்கு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, " சிமெண்ட் மூட்டை ஒன்று 490 ரூபாய் என விற்ற விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் உத்தரவின்பேரில் சிமெண்ட் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்படி, தற்போது ரூபாய் 460 ஆக குறைந்துள்ளது.

இருப்பினும் மேலும் குறைக்க வற்புறுத்தப்பட்டுள்ளது. ஸ்டீல் விலையைக் குறைக்கவும் அரசு எடுத்த முயற்சி காரணமாக அதன் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பொருள்களின் விலையைக் குறைக்கத் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:7.5% இட ஒதுக்கீட்டில் தற்போதைய அரசின் நிலைப்பாடு என்ன - விஜயபாஸ்கர் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details