தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் சில மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
முன்னதாக கோடம்பாக்கம், அண்ணா நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்திருந்த நிலையில், தற்போது தேனாம்பேட்டையிலும் 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 985 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 86 விழுக்காடு நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மணலி மண்டலத்தில் 92 விழுக்காடு நபர்கள் குணமடைந்துள்ளனர். மேலும் இரண்டாயிரத்து 176 பேர் இறந்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் கரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
கோடம்பாக்கம் - 11,940 பேர்
அண்ணா நகர் - 11,758 பேர்
ராயபுரம் - 11,422 பேர்
தேனாம்பேட்டை - 11,074 பேர்
தண்டையார்பேட்டை - 9,732 பேர்