தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் நேற்று நடைபெற்றதைத் தொடர்ந்து, இரண்டாம் தாள் தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றுவருகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு: 2ஆம் தாள் தேர்வு தொடக்கம் - Tet Exam 2019
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்விற்கான இரண்டாம் தாள் தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
TET PAPER 2 EXAM
ஆசிரியர் தகுதித் தேர்வு 'இரண்டாம் தாள்' நான்கு லட்சத்து 20 ஆயிரத்து 815 பேர் எழுதுகின்றனர். இத்தேர்வு 1,081 மையங்களில் 32 மாவட்டங்களில் நடைபெற்றுவருகிறது.
காலையிலேயே தேர்விற்கு பதிவு செய்தவர்கள் ஆர்வமுடன் தேர்வு மையங்களுக்கு வருகை புரிந்தனர். பெண் ஆசிரியைகள் தங்களது கணவருடன் வந்திருந்தனர். சில தேர்வர்கள் தங்களின் கைக்குழந்தைகளையும் தூக்கி வந்திருந்தனர். குழந்தைகளை தங்களது கணவர், உறவினர்களிடம் கொடுத்துவிட்டு தேர்வினை எழுத தேர்வு அறைக்குச் சென்றனர்.
தேர்வர்களுக்கு ஓஎம்ஆர் விடைத்தாள்கள் அளிக்கப்பட்டு அதில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற முதல் தாள் தேர்வில் கேள்விகள் கடினமாக இருந்ததாக தேர்வெழுதியவர்கள் தெரிவித்தனர்.
தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால், அடுத்துவரும் மூன்று ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.