ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளுக்கு ஜூன் மாதம் 8ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வினை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 314 தேர்வர்கள் எழுதினர். இந்தத் தேர்வு தேர்வர்களுக்கான தற்காலிக விடை குறிப்புகள் ஜூலை மாதம் 9ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளின் முடிவு வெளியீடு! - published
சென்னை: ஓன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தற்காலிக விடை குறிப்பில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால், தேர்வர்கள் தெரிவிப்பதற்காக ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டன. தேர்வர்களிடம் இருந்து பெறப்பட்ட விடை குறிப்புகளின் சந்தேகங்கள் வல்லுநர் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு அதன் பின்னர் இறுதி விடை குறிப்புகள் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளிற்கான ஓ.எம்.ஆர் தாள்கள் திருத்தப்பட்டன.
அதன் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளின் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 22ஆம் தேதி வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.