சென்னையில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தப் பரவலைத் தடுக்க சுகாதாரத் துறையும் மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நோய்த்தொற்று குறையாமல் அண்ணா நகர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் போன்ற இடங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தப் பரவலைத் தடுக்கும் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் தினமும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பாக மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது அதன்படி நேற்று 460 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. இதில் 22 ஆயிரத்து 820 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். 1,312 நபர்களுக்கு சிறு அறிகுறி இருந்ததால், அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சென்னையில் ஒரே நாளில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை - கரோனா பரிசோதனை முகாம்
சென்னை: நேற்று ஒரே நாளில் (செப்டம்பர் 9) 22 ஆயிரத்து 820 பேர் மருத்துவ முகாம் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மே மாதம் முதல் இன்று வரை மொத்தம் 44 ஆயிரத்து 791 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது. அதில் 23 லட்சத்து 67 ஆயிரத்து 786 நபர்கள் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மருத்துவ முகாம்கள் மூலம் 22 ஆயிரத்து 243 தொற்று உடையவர்களை மாநகராட்சி கண்டுபிடித்துள்ளது.
தினமும் நடைபெறும் மருத்துவ முகாமினை அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் நாளை (செப்டம்பர் 10) 508 மருத்துவ முகாம்கள் 15 மண்டலங்களிலும் நடைபெறும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.