தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1-ல் இருந்து 4-க்கு மாறும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் விஸ்தாரா உள்நாட்டு விமானங்கள்..!

Chennai Airport: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்நாட்டு விமான சேவைகள் அனைத்தும், சென்னை விமான நிலையம் டெர்மினல் ஒன்றிலிருந்து நான்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, விஸ்தாரா ஏர்லைன்ஸ் உள்நாட்டு விமான சேவைகள் அனைத்தும் வரும் 27ஆம் தேதியிலிருந்து டெர்மினல் ஒன்றிலிருந்து டெர்மினல் 4கிற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1-ல் இருந்து 4-க்கு மாறும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் விஸ்தாரா உள்நாட்டு விமானங்கள்!
1-ல் இருந்து 4-க்கு மாறும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் விஸ்தாரா உள்நாட்டு விமானங்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 10:40 PM IST

சென்னை: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்நாட்டு விமான சேவைகள் அனைத்தும், சென்னை விமான நிலையம் டெர்மினல் ஒன்றிலிருந்து நான்கிற்கு முதல் மாற்றப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் உள்நாட்டு விமான சேவைகள் அனைத்தும் வரும் 27 ஆம் தேதி புதன்கிழமையிலிருந்து டெர்மினல் ஒன்றிலிருந்து டெர்மினல் 4 க்கு மாற்றப்படுகின்றன. அதனால் ஏற்கனவே உள்ள உள்நாட்டு முனையம் டெர்மினல் ஒன்றில் நெரிசல்கள் குறைந்து பயணிகளுக்கு தாராளமான இடவசதிகள் கிடைக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த அறிவிப்பில், "சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே உள்நாட்டு முனையம் ஒரே முனையமாக இருந்தது. இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதியில் இருந்த ஒரே உள்நாட்டு முனையம் இரு முனையங்களாக டெர்மினல் ஒன்று, டெர்மினல் நான்கு என்று செயல்பட்டு வருகிறது.

புதிதாக உருவாக்கப்பட்ட உள்நாட்டு முனையம் டெர்மினல் நான்கில் இருந்து ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் விமான நிறுவனங்களின் வருகை, புறப்பாடு விமானங்கள் கடந்த நவம்பர் 15ஆம் தேதியில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று(டிச.23) முதல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் உள்நாட்டு விமான சேவைகள் அனைத்தும் புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் 4-க்கு மாற்றப்பட்டுள்ளன.

அதைப்போல் தற்போது, டெர்மினல் ஒன்றில் இருந்து இயக்கப்பட்டு வரும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்களின் வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் அனைத்தும், வரும் 27ஆம் தேதி புதன்கிழமையில் இருந்து புதிய உள்நாட்டு முனையமான டெர்மினல் 4-இல் இருந்து இயங்கத் தொடங்குகின்றன.

அதனால், பழைய உள்நாட்டு முனையமான டெர்மினல் ஒன்றில் இனிமேல் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்து நெரிசல்கள் இல்லாமல் பயணிகளுக்கு தாராளமான இட வசதிகள் கிடைக்கும்" என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கோவை - பொள்ளாச்சி புதிய ரயில்..! அமைச்சர் எல்.முருகன் துவங்கி வைத்தார்!

ABOUT THE AUTHOR

...view details