சென்னை:அரசுத் தேர்வுத்துறையால் நடத்தப்பட்ட 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகளில், குறைந்த விழுக்காட்டில் மட்டுமே மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதிலும், 11-ம் வகுப்பு துணைத்தேர்வுகளில் தேர்வு எழுதிய 66ஆயிரம் மாணவர்களில், 8 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, தோல்வியடைந்த பாடங்களில் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி பொதுத்தேர்வு முடிவு வெளியான இரு மாதங்களுக்குள்ளாக துணைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணைத்தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முடிவுகளில் அதிகமான மாணவர்கள் தோல்வி அடைந்திருக்கக்கூடிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.