தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்சென்னை தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்த திருநங்கை

சென்னை: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் திருநங்கை ராதா இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

By

Published : Mar 25, 2019, 5:34 PM IST

chennai

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக திருநங்கை ராதா போட்டியிட உள்ளார். இதற்கு தென் சென்னை வட்டார ஆணையார் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "திருநங்கைகளால் முடியாதது எதுவுமில்லை. ஒரு ஆண், ஒரு பெண் சாதிப்பதை விட திருநங்கையால் சாதிக்க முடியும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் துணை நிற்போம், குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறை, பெண்கள் பாலியல் விவகாரம் முதலியவற்றை ஒழிப்பேன். வீடு இல்லாமல் சாலையில் வாழ்பவர்களுக்கு வீடு கட்டித் தருவேன்.

திருநங்கைகளுக்கு கல்வி, தொழில் முதலியவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்ற சட்டம் நிறைவேறியிருக்கிறது அதற்காக பாடுபடுவேன்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details