தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆங்கில புத்தாண்டு - சென்னையில் 10000 போலீசார் பாதுகாப்பு - new year celebration in chennai

புத்தாண்டு பண்டிகையை ஒட்டி சென்னையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், ஈசிஆர் மெரினா உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

ஆங்கில புத்தாண்டு - சென்னையில் சுமார் 10000  காவலர்கள் பாதுகாப்பு
ஆங்கில புத்தாண்டு - சென்னையில் சுமார் 10000 காவலர்கள் பாதுகாப்பு

By

Published : Dec 30, 2021, 7:14 AM IST

சென்னை : திருட்டு மற்றும் குற்ற வழக்குகளில், குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.அதில் சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் கலந்துகொண்டு மீட்கப்பட்ட நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

சென்னை பெருநகரில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ. 5 கோடியே 56 லட்சம் மதிப்புள்ள 2419.72 கிராம் தங்க நகைகள், 1,463 செல்போன்கள், 183 இருசக்கர வாகனங்கள், 12 ஆட்டோக்கள், மற்றும் 46 நான்கு சக்கர வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர்
தலைமையில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

12 காவல் மாவட்டங்களிலிருந்து வந்த மக்கள் தனித் தனி வரிசைகளில் அமர வைக்கப்பட்டு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு செல்போன், நகைகள், வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஆங்கில புத்தாண்டு - சென்னையில் சுமார் 10000 போலீசார் பாதுகாப்பு

பறக்கும் படை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர், "15 கோடி மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 3ல் ஒரு பகுதி பொருட்கள் மட்டும் இன்று வழங்கப்படுகிறது. ரவுடிகள், போதைப்பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இளைஞர்கள் பலர் தவறாக வழிநடத்தப்பட்டு நகை திருடர்களாக மாறுகிறார்கள். வருங்காலத்தில் சி.சி.டி.வி உதவியுடன் நகைதடுப்பு பறக்கும் படைகளை அமைத்து, நகரில் மக்கள் கூடும் இடங்களில் திருட்டு சம்பவங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


10,000 காவலர்கள்

நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31ஆம் தேதி பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும். புத்தாண்டு பண்டிகையை ஒட்டி சென்னையில் 10,000 காவலர்கள் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுவார்கள். வழிபாட்டு தளங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது கண்காணிக்கப்படும். இசிஆர், மெரினா உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். Drunk & Drive சோதனை நடத்தப்படும்.



அபராதம்ஆலயங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கிரிப்டோ கரன்சியை பொறுத்தவரை நமக்கு பெரிய அளவு வழக்குகள் வரவில்லை. தற்போது வரை சைபர் கிரைம் காவல்துறையினர் தான் இது தொடர்பான மோசடி வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.அடுத்த மாதம் சென்னையில் 4 காவல்நிலையங்களில் சைபர் கிரைம் டீம் அமைக்க உள்ளோம்.

மாணவர்களுக்கு கவுன்சிலிங்

கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சினைகள் ரூட்டு தல வன்முறைகள் போன்றவற்றை அடக்குவதற்காக கல்லூரிகள் சார்பில் ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு சிறந்த கவுன்சிலிங் கொடுத்து குற்றச் செயல்களில் ஈடுபடாத வகையில் அவர்களை மன மாற்றம் செய்வதற்கான முயற்சிகளை சென்னை காவல் துறை எடுத்து வருகிறது. சட்டத்தை மீறும் கல்லூரி மாணவர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Conclusion:Increase RT-PCR tests: ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details