தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10% குறைப்பு - electricity bill

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 9, 2022, 8:54 PM IST

சென்னை:சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10 விழுக்காடு குறைப்பு என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "2022-2023ஆம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் செப்.10ஆம் தேதி முதல் மின்கட்டண ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதால், ஒருநாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை (Peak Hour Charges) குறைக்கும்படி பல்வேறு குறு, சிறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கியப் பங்காற்றுவதை கருத்தில்கொண்டு அவர்களின் கோரிக்கையினை ஏற்று குறைந்தழுத்த மின் இணைப்பு (Low Tension III-B) கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைக்கலாம் என முடிவு செய்து உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

இவ்வாறு மின்கட்டணத்தை குறைப்பதால் தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும்" என அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:காருக்குள் மண்டை ஓடு.. ஏலம் எடுக்கச்சென்றவர்கள் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details