சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் மற்றும் அவரது காதலி ஆகியோரை கடத்தி சிறைபிடித்து சித்ரவதை செய்ததோடு, அவரின் பெயரிலிருந்த சொத்துகளை எழுதி வாங்கியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அப்போது காவல் ஆணையராக இருந்த மகேஸ் அகர்வால், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், அப்போது காவலர்களாக இருந்த கிரி, பாலா, சங்கர் மற்றும் அனைத்திந்திய இந்து மகா சபா கட்சித் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன், வெங்கட கிருஷ்ண பிரசாத், அவரது மகன் தருண் கிருஷ்ணபிரசாத், சிவா மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார். நீதிபதி தனது தீர்ப்பில், 'இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல் துறை அதிகாரிகள் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.