ஜூலை மாதம் 23ஆம் தேதி சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆந்திர மாநிலம் கிருஷ்ணாம்பட்டி கடற்பகுதிக்கு பத்து மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் கடலுக்கு சென்ற பத்து மீனவர்களும் கடந்த 7ஆம் தேதி கரைக்குத் திரும்பி இருக்க வேண்டும். ஆனால் இதுவரை கரைக்கு திரும்பாததால் மீனவர்களின் உறவினர்கள் சென்னை காசிமேடு மீன் வளத்துறை அலுவர்களிடம் புகார் தெரிவித்தனர்.
அதில் கடந்த 28ஆம் தேதி ஆந்திர மாநிலம் கிருஷ்ணாம்பட்டி கடற்கரையில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகுகளை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், பத்து மீனவர்களை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அவர்களது உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.
சென்னையில் ஆழ்கடலில் மாயமான 10 மீனர்வர்கள்: தேடும் பணி தீவிரம்! இந்நிலையில், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க காசிமேடு உள்ளூர் மீனவர்கள் மூலம் விசைப்படகில் சென்று கடல் வழியாகவும், வான் வழியாகவும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீன்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க...சென்னை மாநகராட்சி அரசுப் பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி