சென்னை: தலைநகர் சென்னையில் கரோனா இரண்டாவது அலையின்போது மருத்துவமனைகளில் படுக்கை முழுவதும் நிரம்பிய நிலையில் பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகளில் ஒட்டுமொத்தமாக 32 கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்னையில் 14 கரோனா சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக மூடல்
சென்னையில் அமைக்கப்பட்ட 32 கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் (Covid care centre) 14 சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
இந்த 32 மையங்களில் மட்டும் எட்டாயிரத்து 567 படுக்கைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் குறைந்ததையடுத்து மொத்தம் இருந்த 32 சிகிச்சை மையங்களில் 14 சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் கரோனா வைரஸ் மூன்றாவது அலை வந்தால் மீண்டும் தற்காலிகமாக மூடப்பட்ட அந்த மையங்கள் மீண்டும் திறக்கப்படும். 32 கரோனா சிகிச்சை மையங்களில் எட்டாயிரத்து 567 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், அதில் 338 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.