தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில்களில் பக்தர்கள் புகார் அளிக்க 24 மணி நேர இலவச தொலைபேசி எண் - நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு - இந்து சமய அறநிலையத்துறை

கோயில்களில் பக்தர்கள் புகார்களுக்கு 24 மணி நேர இலவச தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நீதிபதியிடம் கோயில் தரிசன டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட கோயில் ஊழியர்கள் சஸ்பெண்ட்
நீதிபதியிடம் கோயில் தரிசன டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட கோயில் ஊழியர்கள் சஸ்பெண்ட்

By

Published : Jan 10, 2023, 11:14 AM IST

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் வடபழனி முருகன் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் தரிசனத்துக்காக சென்றுள்ளார். சிறப்பு தரிசன கட்டணத்தில் தரிசனம் செய்ய விரும்பி 3 டிக்கெட்டுகளைப் பெற 150 ரூபாய் (தலா ரூ.50) கட்டணத்தை வசூல் செய்யும் கோயில் ஊழியரிடம் கொடுத்துள்ளார்.

ஆனால், ஊழியர் அவரிடம் இரண்டு 50 ரூபாய்க்கான டிக்கெட்டையும், ஒரு 5 ரூபாய்க்கான டிக்கெட்டையும் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதி, கோயில் ஊழியரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, நீதிபதியின் புகாரைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) உயர் அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரித்து டிக்கெட் கவுண்டரில் பணியாற்றிய ரேவதி மற்றும் டிக்கெட் பரிசோதனை செய்த ரவிச்சந்திரன் ஆகியோரை பணியிட நீக்கம் செய்தும், ஆய்வாளர் ஜெயந்தரை மீஞ்சூருக்கு பணியிட மாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு ப்ளீடர் முத்துக்குமார் ஆஜராகி, இந்து சமய அறநிலைத்துறை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட வருவாய் துறை அலுவலர் விஜயா தலைமையில் விசாரணை அதிகாரியாக நியமித்தும் அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திடீர் ஆய்வு செய்வதற்காக துணை ஆட்சியர் தலைமை 4 பறக்கும் படை அமைக்கப்பட்டும் அந்த ஆய்வின் அறிக்கையை அறநிலை துறை ஆணையரிடம் தாக்கல் செய்யப்படும்.

கோயில்களில் பக்தர்கள் புகார்கள் தெரிவிக்க ஏதுவாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 1800-425-1757 இலவச டோல் ப்ரீ எண்ணை, கடந்த 4ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்துள்ளார். இந்த எண்ணை அனைத்து கோவில் வளாகத்தில் அறிவிப்பு பலகையாகவும், கோயிலில் நுழைவு சீட்டில் டோல் ஃப்ரீ எண் என அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பக்தர்களுக்கு தரிசன சீட்டு வழங்கும் போது அதன் தொகை மற்றும் சீட்டு எண்ணிக்கை உட்பட அனைத்து விவரங்களையும் தானியங்கி இயந்திரம் மூலம் தமிழில் அறிவிக்கப்படும். கோயில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புக்காக 16.50 கோடி ரூபாய் செலவில் திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணி சுவாமி திருக்கோயில்யில் பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் கட்டுக்கடாக வெளிநாட்டு பணம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details