சென்னை:பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள பழமையான சித்தி கணேசர் நடராஜ பெருமாள் துர்கை அம்மன் கோயிலுக்கு சொந்தமான கல்யாண மண்டபம் நிர்வாகம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி அளித்துள்ள தீர்ப்பில், "மக்கள் ஒரு காலத்தில் தங்களது சொத்துகளை கோயிலுக்கு தானமாக அளிக்கும் பழக்கம் இருந்ததது. கோயில் சொத்துகளை அபகரிப்பது அல்லது சுரண்டுவது பெரும் பாவமாக மக்கள் கருதினர். அது அவர்களுக்கு பயத்தை அளித்தது. ஆனால், இப்போது அப்படியில்லை.