சென்னை:தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் நிதியில் முதியோர் இல்லங்கள் தொடங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி, வில்லிவாக்கம் ஸ்ரீதேவி பாலியம்மன் மற்றும் எலங்கியம்மன் கோவில் நிதியில் இருந்து ரூ.16.30 கோடியும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இருந்து ரூ.13.50 கோடி, பழனி தண்டாயுதபாணி கோவிலில் இருந்து ரூ.15.20 கோடி நிதியை பயன்படுத்தி முதியோர் இல்லங்கள் தொடங்குவது தொடர்பாக கடந்த ஜனவரி 12ஆம் தேதி அறநிலையத் துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சட்டப்படி கோவில் நிதியை அரசு பயன்படுத்த முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.