தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வுமையம்!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 21, 2023, 3:34 PM IST

சென்னை: அண்மைக்காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆங்காங்கே வெப்ப அலைகளையும், கானல் நீரையும் பார்க்க முடிகிறது.

இந்நிலையில், வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக் குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், "தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்றும்(ஏப்.21), நாளையும்(ஏப்.22) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்.23, 24ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் ஏப்.25ஆம் தேதி இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இன்றும்(ஏப்.21), நாளையும்(ஏப்.22) அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மேலும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது நேரடி வெயிலில் செல்வது முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல் நலப்பாதிப்பு உள்ளவர்களுக்கு வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக, சோர்வு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் வெப்ப குறியீட்டை ஆய்வு செய்த போது, நாட்டில் 90 சதவீத பகுதிகள் வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details