சென்னை:பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த தெலங்கானா மாநில வேளாண் துறை அமைச்சர் சிங்கிரெட்டி நிரஞ்சன் ரெட்டிக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், தேனாம்பேட்டையில் உள்ள இந்திய பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனை அமைச்சர் சிங்கிரெட்டி நிரஞ்சன் ரெட்டி மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார். அப்போது தெலங்கானா அரசு சார்பில் நினைவு பரிசு ஒன்றை அமைச்சர் சிங்கிரெட்டி நிரஞ்சன் ரெட்டி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பில், தெலங்கானாவில் மேற்கொள்ளப்படும் விவசாய கொள்கைகள், 2023-2024 நிதியாண்டில் விவசாய மானியம், அரிசி விலை, தெலங்கனா அரசின் வேளாண் ஆய்வுகள் குறித்து எம்.எஸ்.சுமாமிநாதனிடம் அமைச்சர் விளக்கினார்.
இதையும் படிங்க:நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விரைவில் விவாதம்.. தப்புமா பாஜக அரசு! நடைமுறை என்ன?
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிங்கிரெட்டி நிரஞ்சன் ரெட்டி, "இந்திய பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுடன் சந்திப்பு மரியாதை நிமித்தமானது. மேலும், எம்.எஸ்.சுவாமிநாதன் ஒரு மிக சிறந்த இயற்கை விஞ்ஞானி. உலகமே அவரின் வேளாண் அறிக்கை கவனித்த வண்ணம் செயல்பட்டு வருகிறது. என்றார்.