தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’உங்கள் ஆட்சிக்கு தமிழ்நாடு மக்கள் காத்திருக்கிறார்கள்’ - உங்கள் ஆட்சிக்கு மக்கள் காத்திருக்கிறார்கள்

ஸ்டாலினின் திறமையான தலைமையின்கீழ் இயங்கும் ஆட்சிக்காக தமிழ்நாடு மக்கள் பெரிதும் காத்திருக்கிறார்கள் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஷ்வி யாதவ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தேஜஷ்வி யாதவ் ட்வீட்
தேஜஷ்வி யாதவ் ட்வீட்

By

Published : May 2, 2021, 4:37 PM IST

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் எட்டு தொகுதிகளில் திமுக வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளது.

அதிமுக இரண்டு இடங்களில் வென்றுள்ளது. இருகட்சிகளுக்கு இடையிலும் கடும் போட்டி நிலவிவரும் நிலையில், 144 இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், பிற மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர். பிகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான தேஜஷ்வி யாதவ், ஸ்டாலினுக்கு தனது ட்விட்டர் தளத்தில் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

தேஜஷ்வி யாதவ் ட்வீட்

அதில், "ஸ்டாலின் உங்களுக்கும், இந்த மாபெரும் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட திமுக மற்றும் கூட்டணியை சேர்ந்தவர்களுக்கும் வாழ்த்துகள். உங்களுடைய திறமையான தலைமையின்கீழ் முற்போக்கான மக்கள் சார்பு கொள்கைகளோடு இயங்கும் ஆட்சிக்காக தமிழ்நாடு மக்கள் பெரிதும் காத்திருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details