சென்னை எழும்பூர் முதல் மதுரை இடையே சிறப்பு ரயில் வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''சென்னை எழும்பூர் - மதுரை தேஜாஸ் சிறப்பு ரயில் எண் 02613 செவ்வாய்க் கிழமை தவிர வாரத்தில் மற்ற ஆறு நாள்களும் வரும் 13ஆம் தேதி முதல் செல்லவுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து 6:30 மணிக்கு புறப்பட்டு திருச்சிராப்பள்ளிக்கு காலை பத்து முப்பது மணிக்கு சென்றடையும். அங்கிருந்து 10:35 மணிக்கு புறப்பட்டு 11.53 மணிக்கு கொடைக்கானல் ரோடு சென்றடையும். அங்கிருந்து 11.55 மணிக்கு புறப்பட்டு 12.50 மணிக்கு மதுரை சந்திப்பு சென்றடையும்.