தமிழ்நாட்டில் உள்ள 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பட்டயத் தேர்வை 11,950 பேர் எழுதினர். இதில் வெறும் 455 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், அந்த விடைத்தாள்களை திருத்திய 300 விரிவுரையாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆசிரியர்தேர்வு விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு - 300 விரிவுரையாளர்கள் மீது நடவடிக்கை - 300 lectures
சென்னை: தொடக்கக் கல்வி ஆசிரியர் தேர்விற்கான விடைத்தாள் திருத்தும்போது முறைகேட்டில் ஈடுபட்ட 300 விரிவுரையாளர்கள் மீது மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
இதனையடுத்து சம்பந்தப்பட்ட விரிவுரையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில் அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் உரிய விளக்கம் அளிக்கக்கோரி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், சம்பந்தப்பட்டவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.