தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐஏஎஸ் நுழைவுத் தேர்வில் தோல்வி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - குற்றச் செய்திகள்

ஐஏஎஸ் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைத் தீர்வல்ல!
தற்கொலைத் தீர்வல்ல!

By

Published : Aug 6, 2021, 8:01 PM IST

சென்னை: தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் ஸ்ரீராம் காலனியைச் சேர்ந்தவர் எழிலரசி. சோழிங்கநல்லூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவரது மகள் பிரியதர்சினி (25). பிரியதர்சினி ஐ.ஏ.எஸ் நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.

இந்நிலையில் பிரியதர்சினி ஐ.ஏ.எஸ் நுழைவு தேர்வில் தோல்வி அடைந்ததால், கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று (ஆக.6) வழக்கம்போல் எழிலரசி பணிக்கு சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பியுள்ளார்.

தற்கொலை தீர்வல்ல!

தூக்கிட்டு தொங்கிய இளம்பெண்

அப்போது கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்துள்ளது. வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த எழிலரசி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது அவரது மகள் பிரியதர்சினி தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சிட்லப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:காணாமல் போனவர் சொந்த வீட்டிலேயே எலும்புக்கூடாக கண்டெடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details