தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பராமரிப்பு பணி முடிந்த ஒரே நாளில் மின் நிலையத்தில் மீண்டும் கோளாறு - வட சென்னை அனல் மின் நிலையம்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து மின் உற்பத்தி தொடங்கிய ஒரே நாளில் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

Power plant
Power plant

By

Published : Sep 5, 2021, 7:52 AM IST

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையின் மூன்று அலகுகளில் தலா 210 மெகா வாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையின் இரண்டு அலகுகளில் தலா 600 மெகா வாட் மின் உற்பத்தியும் என மொத்தம் 1,830 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

முதலாவது நிலையில் உள்ள இரண்டாவது அலகில் ஜூலை மாதம் 15ஆம் தேதி ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 49 நாட்கள் பராமரிப்பு பணிகள் முழுவதுமாக முடித்து மீண்டும் நேற்று 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து மின் உற்பத்தி தொடங்கிய ஒரே நாளில் அந்த அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் 210 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details