தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது" - சென்னை மெட்ரோ!

vimco metro station: விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு சிறிது நேரத்தில் வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

technical-glitch-at-vimco-nagar-metro-station
விம்கோ மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழிநுட்ப கோளாறு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 1:07 PM IST

சென்னை: விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று (நவ 6) காலை 11.20 மணியளவில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் வரை 9 நிமிட இடைவெளியிலும், ஒரு வழிப்பாதையில் மெட்ரோ ரயில்கள் 20 நிமிட இடைவெளியிலும் இயக்கப்பட்டன.

அதேநேரம், நீல வழித்தடத்தில் சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஏ.ஜி.டி.எம்.எஸ், நந்தனம் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டன. இந்நிலையில், விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரை சரி செய்யும் பணியில் தொழில் நுட்ப வல்லுநர்கள் துரிதமாக ஈடுபட்டனர்.

தொழில்நுட்ப கோளாறு வெகு விரைவில் சரிசெய்யப்பட்டு மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், தொழில் நுட்பக் கோளாறு விரைந்து சீரமைக்கப்பட்டு மீண்டும் வழக்கம் போல் ரயில் சேவைகல் இயக்கப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க:தொடரும் ஐடி ரெய்டு! அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக வருமான வரி சோதனை!

ABOUT THE AUTHOR

...view details