தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் மீதான நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு’ - முதலமைச்சர் உத்தரவு

சென்னை: சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் மீதான நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்பிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில், ஒன்பது பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர்
முதலமைச்சர்

By

Published : Jun 10, 2021, 3:45 PM IST

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறை, சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், அவற்றை சரி செய்யும் வகையில், இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும், அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைகளை அளித்திட ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில், கல்வியாளர்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னதாக அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பின்படி, ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில், கீழ்க்காணும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை அமைத்து முதலமைச்சர் இன்று (ஜூன்.10) உத்தரவிட்டுள்ளார்.

  1. தலைவர் நீதியரசர் ஏ கே.ராஜன் ( ஓய்வு )
  2. டாக்டர் ஜி.ஆர் இரவீந்திரநாத் - உறுப்பினர்
  3. டாக்டர் ஜவஹர் நேசன் - உறுப்பினர்
  4. அரசு முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை - உறுப்பினர்
  5. அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை - உறுப்பினர்
  6. அரசு செயலாளர், சட்டத் துறை அரசு - உறுப்பினர்
  7. அரசு முதன்மைச் செயலாளர் / சிறப்புப் பணி அலுவலர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம் - உறுப்பினர்
  8. கூடுதல் இயக்குநர் மருத்துவக் கல்வி இயக்ககம், செயலர், தேர்வுக் குழு - உறுப்பினர் - செயலர் / ஒருங்கிணைப்பாளர்

    இந்தக் குழு உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து தமிழ்நாட்டிலுள்ள பின்தங்கிய மாணவர்களின் நலனைப் பாதுகாத்திட, தேவையான பரிந்துரைகளை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும். இந்தப் பரிந்துரைகளை ஆய்வு செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details