நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முதல்வரிசை பணியாளர்களான மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் இன்ன பிற அரசு அலுவலர்கள் என அனைவரும் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர தீவிர பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணைகளில் கூறப்பட்டுள்ள நடைமுறைகள், மாவட்ட அளவில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.