தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’நீங்க மட்டும்தான் இங்கிலீஸ் பேசுவீங்களா நாங்களும் பேசுவோம்’ - அரசுப் பள்ளி மாணவர்கள் - English language teach to government school students

சென்னை: அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு முறையில் ஆங்கிலத்தினை கற்கும் புதிய முறையை எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

English language is teach in government schools
English language is teach in government schools

By

Published : Dec 5, 2019, 5:29 PM IST

Updated : Dec 5, 2019, 10:11 PM IST

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும்திறன் இல்லை என்ற பொதுவாக அனைவரிடமும் இருந்துவருகிறது. இதனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிறப்பாக ஆங்கிலம் பேசுவார்கள் எனக் கருதி பெற்றோர் அரசுப் பள்ளிகளைத் தவிர்க்கின்றனர். இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது.

தாய்மொழி சிறப்பாக தெரிந்தாலும் உயர் கல்வி, வேலைவாய்ப்பிற்கு ஆங்கில அறிவு தேவையாக உள்ளது. எனவே பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு ஆங்கில அறிவுக்கு அதி முக்கியத்துவம் அளித்துவருகின்றனர்.

இதனை மாற்றி பெற்றோரை அரசுப் பள்ளிகள் பக்கம் வரவைப்பதற்காகப் பள்ளிக் கல்வித் துறை பல்வேறு முயற்சிகளை கையாண்டுவருகிறது. மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் எதைக் கற்பித்தாலும் அவர்கள் ஆர்வமாகவும் அதேசமயம் விரைவாகவும் கற்றுக் கொள்வார்கள். இதனை கருத்தில்கொண்டு சென்னை எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டு முறையில் ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. அதற்காக மாணவர்களைக் குழுவாக வட்ட வடிவில் அமரவைத்து அவர்களுடன் ஆசிரியரும் இணைந்து ஆங்கிலத்தை கற்பிக்கிறார்.

ஆங்கிலத்தில் உரையாடும் பள்ளி மாணவர்கள்

முதலில் ஆசிரியர் கேள்விக்கான ஒரு ஆங்கில வாக்கியத்தை கூற, அதை ஒரு மாணவர் அருகில் இருக்கும் மற்றொரு மாணவரிடம் சத்தமாக கூறுகிறார். அந்த வாக்கியம் சங்கிலி இணைப்பாக ஒவ்வொரு மாணவரிடம் கூறப்பட்டு அந்தக் குழுவின் கடைசி மாணவரிடம் நிறைவடைகிறது.

இம்முறை ஆசிரியர் அந்தக் கேள்விக்கான பதில் வாக்கியத்தை முதல் மாணவரிடம் கூறுகிறார். அந்தப் பதில் சங்கிலித் தொடர் போல் அனைத்து மாணவர்களையும் சென்றடைகிறது. இந்த விளையாட்டு பள்ளியோடு மட்டும் நின்றுவிடாமல், வீடுகளில் அன்றாட பணிகளுக்கான ஆங்கில வார்த்தைகளை மாணவர்கள் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.

தலைமையாசிரியர் சண்முகவேல்

இது குறித்து அப்பள்ளியின் தலைமையாசிரியர் சண்முகவேல் கூறுகையில், “பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்கு விளையாட்டு முறையில் ஆங்கிலம் கற்பித்துவருகிறோம். இதனால் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறனை பெறுகின்றனர். ஆங்கிலம் நன்றாகப் பேசுவதற்காக பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும் நிலையை மாற்றவே, மாணவர்களுக்கு ஆங்கில அறிவினை அளித்துவருகிறோம்” என்று கூறினார்.

இது குறித்து அப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி கூறுகையில், ”வழக்கமான கற்றல் முறையிலிருந்து மாறுபட்டு எளிதான விளையாட்டு முறையில் ஆங்கிலத்தைக் கற்பித்துவருகிறோம். இதனால் மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதோடு மட்டுமல்லாமல், ஆங்கிலம் கற்பதில் மாணவர்களுக்கிடையே நிலவும் சவால்களும் குறைந்துள்ளன. மாணவர்கள் வீடுகளில் ஆங்கிலம் பேசுவதாக பெற்றோர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்” என்றார்.

ஆசிரியை விஜயலட்சுமி

ஆங்கிலம் கற்பிக்கும் முறை தற்போது எளிமைப்படுத்தப்பட்டிருப்பதால் ஆங்கில பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்வதுடன், ஆங்கில பாடத்தில் கூடுதல் மதிப்பெண்ணையும் அவர்களால் பெற முடிகிறது. அரசுப் பள்ளியில் பயிலும் தங்களது குழந்தைகள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக ஆங்கிலத்தில் பேசுவது தங்களுக்கு மகிழ்ச்சியளித்திருப்பதாக மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர் .

பள்ளிக் கல்வித் துறை எடுத்துள்ள இந்தப் புதுமையான முயற்சி அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கையினை அதிகரித்துள்ளதுடன், ஆங்கிலம் எளிதாக பேசுவதும், படிப்பதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனி என்றிருந்த நிலையும் தற்போது மாறியுள்ளது. சென்னையில் மட்டுமிருக்கும் இந்த முறையை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

இதையும் படிங்க: 'ஆங்கிலம் பேசறது அல்வா சாப்பிடற மாதிரி' - அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்!

Last Updated : Dec 5, 2019, 10:11 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details