தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் உரையை கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் - ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு - Teachers union opposes Pongal festival report

சென்னை: பொங்கல் தினத்தன்று பிரதமர் மோடி பேச்சைக் கேட்க மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்ற அறிவிப்புக்கு ஆசிரியர் சங்கத் தலைவர் தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு
ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

By

Published : Dec 28, 2019, 5:47 PM IST

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த அறிக்கைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கல்வித்துறையில் அலுவலர்களிடையே போதிய புரிதல் இல்லாத காரணத்தால் முரண்பாடான பல அறிக்கைகள் வெளியிடப்பட்டுவருகின்றன. பொங்கல் பண்டிகையை மாணவர்களும், ஆசிரியர்களும் கொண்டாடக்கூடாது என்கிற நோக்கில் தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெயியிட்டுள்ளது. இதுபோன்ற குழப்பதைத் தவிர்க்க, விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என அறிக்கை வெளியிட வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: பள்ளிக் கல்வித்துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையா ? - ஸ்டாலின் கேள்வி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details