தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதுகலை ஆசிரியர்கள் பணி இடமாறுதல்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு! - முதுகலை ஆசிரியர்கள் பணியிடமாறுதல் குறித்து கல்வியாளர்கள் கருத்து

பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் முதுகலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றுவருவது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முதுகலை ஆசிரியர்கள் பணி இடமாறுதல்
முதுகலை ஆசிரியர்கள் பணி இடமாறுதல்

By

Published : Mar 9, 2022, 5:36 PM IST

சென்னை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சுமார் 4 ஆயிரம் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த நிலையில் முதுகலை ஆசிரியர்கள் பணியிடமாறுதல் கலந்தாய்வு, தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் ஏற்கெனவே உள்ள பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பணியிட மாறுதல் கலந்தாய்வில் இடங்களைத்தேர்வு செய்து, ஆசிரியர்கள் வரும் 10ஆம் தேதி பணியில் சேர வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தொடக்கப் பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும்

இதுகுறித்து அகில இந்திய கல்வி பாதுகாப்பு செயற்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி கூறும்போது, "பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் முதுகலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றுவருவது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கல்வியைப்பாதிக்கும். கல்வியாண்டின் தொடக்கத்திலேயே அதாவது ஜூன், ஜூலை மாதத்திலேயே ஆசிரியர்கள் பணியிடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். வரும் கல்வியாண்டில் ஜூன் மாதத்தில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

அகில இந்திய கல்வி பாதுகாப்பு செயற்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி பேட்டி

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தொடக்கப்பள்ளிகளில் ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதனைமாற்றி வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்ற வீதத்தில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு கொண்டு வரும் புதிய மாநிலக் கல்வி கொள்கையில் தொடக்கப் பள்ளிகளை வலுப்படுத்தும் வகையில் செயல்படுத்த வேண்டும். வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அச்சத்தில் ஆசிரியர்கள்... தேசிய வரைவு உயர்கல்வித்தகுதிகள் திட்டத்தை திரும்பப்பெற கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details