தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆக.9 ஆம் தேதி முதல் கல்லூரிக்கு ஆசிரியர்கள் வருகை புரிய உத்தரவு - etv bharat

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை கல்லூரிகளிலும் ஆக.9ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்கள் தவிர மற்றவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்க வேண்டும் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

கல்லூரிக்கு ஆசிரியர்கள் வருகை புரிய உத்தரவு
கல்லூரிக்கு ஆசிரியர்கள் வருகை புரிய உத்தரவு

By

Published : Aug 6, 2021, 4:25 PM IST

சென்னை: இது குறித்து உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்குநர், அனைத்து பல்கலைக் கழங்களின் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "2021-22 ஆம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தவிர பிற மாணவர்களுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் ஆக. 9 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்.

எனவே அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்களும் கல்லூரிகளுக்கு நேரில் வருகை தர வேண்டும். அனைத்து வேலை நாள்களிலும் கட்டாயம் வருகை தர வேண்டும்.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில், கரோனா பாதுகாப்பு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கோயில் நிலங்கள் குறித்த வழக்கு: இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details