தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா காலத்தில் பணியாற்றாத ஆசிரியர்களுக்கு விருது இல்லை - corona period

தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதிற்கு கரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்பிக்காத ஆசிரியர்களை தேர்வு செய்யக்கூடாது என அரசு அறிவித்துள்ளது.

கரோனா காலத்தில் பணியாற்றாத ஆசிரியர்களுக்கு விருது இல்லை
கரோனா காலத்தில் பணியாற்றாத ஆசிரியர்களுக்கு விருது இல்லை

By

Published : Aug 5, 2021, 7:01 PM IST

சென்னை:முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பெயரால் ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று நல்லாசிரியர் விருது தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.

2020-21 ஆம் கல்வியாண்டிற்கு 385 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 171 ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 171 ஆசிரியர்கள், மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் மாவட்டத்திற்கு ஒருவர் என 37 ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்கள் இரண்டு பேர், சமூகப்பாதுகாப்புத்துறை பள்ளி ஆசிரியர்கள் இரண்டு பேர், மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் இரண்டு பேர் என மொத்தம் 385 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

பரிந்துரைக்கும் தகுதிகள்

இதற்காக மாவட்ட, மாநில அளவில் குழு அமைத்து ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார்.

விருது வழிகாட்டு நடைமுறைகள்

விருதிற்கு பரிந்துரைக்கப்படும் அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தது ஐந்து வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் எவ்விதக் குற்றச்சாட்டிற்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராகவும், அரசியலில் பங்குப்பெற்று அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்களை கண்டிப்பாகப் பரிந்துரைக்கப்பட கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசால்‌ பரிந்துரைக்கப்பட்டு தேசிய விருது பெற்ற ஆசிரியரை பரிந்துரை செய்தல்‌ கூடாது. கரோனா பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் கல்வி முறை உள்ளிட்ட மாணவர்களை நேரடியாகச் சென்றடையும்‌ வகையில்‌ கல்விப்‌ பணியாற்றியிருக்க வேண்டும்‌. பெருந்தொற்றுக் காலத்தில்‌ மேற்கூறிய வழிகளில்‌ கல்விப் பணி ஆற்றாத ஆசிரியர்களை அறவே தவிர்க்க வேண்டும்‌ என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சாதிப் பெயர் நீக்கம் - அதிமுக மீது பாயும் லியோனி

ABOUT THE AUTHOR

...view details