சென்னை:ஆசிரியர்களுக்கு மீண்டும் மீண்டும் பயிற்சி அளிப்பதால் கற்பித்தல் பணி பாதிக்கும் எனவும், இது தேசிய கல்விக்கொள்கையின் உட்கூறாக இருக்கிறது என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் மயில் கூறும்போது, "ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத்திட்ட இயக்ககம் தொடக்கக்கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அளவுக்கு அதிகமாகப் பயிற்சிகள் வழங்குவதைக் கைவிட்டு, ஆசிரியர்களை முழுமையாகக் கற்பித்தல் பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டும்.
கரோனா பெருந்தொற்றின் காரணமாக 2021-22ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வி மாணவர்களின் கற்றல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டில் இரண்டு மாதங்கள் மட்டுமே இதுவரை வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் நடைபெற்றுள்ளது. அதுவும் இக்காலகட்டத்தில் மாணவர்களை வகுப்பறைச் சுழலுக்குக் கொண்டுவரும் ஆயத்தப் பணிகளே பெரும்பாலும் நடைபெற்றுள்ளன.
இச்சூழ்நிலையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகைப் பள்ளிகளும் திறக்கப்பட்டுக் கற்றல், கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே கடந்த ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2ஆம் தேதி முடிய 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட 'கற்றல் விளைவுகள்' பயிற்சியின்போது, குடிப்பதற்கு 'பச்சைத் தண்ணீர்' கூட கொடுக்காத நிலை இருந்தது.
ஆசிரியர்களுக்கே தேர்வு என்பது வேதனை