தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஸ்எஸ்எல்சி வினாத்தாள் முறையை மாற்ற வேண்டும்: பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை! - question pattern change

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திற்கான கேள்வித்தாளின் அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என ஆசிரியர்கள், தமிழ அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

question paper pattern to be changed
வினாத்தாள் அமைப்பு மாற்றம்

By

Published : Jun 23, 2023, 7:11 PM IST

சென்னை:தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள வினாத்தாளில் அனைத்து பாடத்திற்கும் அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் 10 வழங்கப்பட்டுள்ளது. அறிவியல் பாடத்திற்கான செய்முறை பயிற்சியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனவும், அதில் செய்முறைத் (PRACTICAL) தேர்வில் 15 மதிப்பெண்ணும், கருத்தியல் (THEORY) தேர்வில் 20 மதிப்பெண்ணும் கட்டாயம் பெற வேண்டும் என உள்ளது.

இதனை மாற்றி அமைத்து, ஏற்கனவே இருந்தது போல செய்முறை, கருத்தியல் தேர்வு இரண்டையும் சேர்த்து 35 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என மாற்றி அமைக்க வேண்டும் என ஆசிரியர்கள் கருதுகின்றனர்.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், மாநில ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநருக்கு அளித்துள்ள கடிதத்தில், "10ஆம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் 2019-20 ம் கல்வியாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.புதிய பாடத்திட்டத்தின் போது அனைத்து பாடங்களுக்கும் வினாத்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது.

அறிவியல் பாடத்தின் வினாத்தாள் வடிவமைப்பு கடினமாக இருப்பதால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பெரிதும் குறைந்து வருகிறது. ஆகவே மாணவர்கள் நலன் கருதி வினாத்தாள் மாற்றம் கொண்டு வர வேண்டும். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கூட இல்லாத வகையில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி மதிப்பெண் 35 பெற்றாலும், கருத்தியல் (THEORY) குறைந்தபட்சம் 20 மதிப்பெண் பெறாவிட்டால் தேர்ச்சி இல்லை என நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, குறைந்தபட்ச தேர்ச்சிக்கான 20 மதிப்பெண் என்கிற முறையை நீக்க கேட்டுக் கொள்கிறோம். அறிவியல் வினாத்தாளில் ஏற்கனவே இருந்த வினாத்தாள் வடிவமைப்பு முறை மாற்றப்பட்டு இரண்டு மதிப்பெண் வினாக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, ஏழு மதிப்பெண் வினாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேல்நிலை வகுப்புகளில் கூட ஏழு மதிப்பெண் வினாக்கள் இடம் பெறுவதில்லை.

அதனால் ஒரு வினாவை தவறவிட்டாலும் மாணவர்களுக்கு 7 மதிப்பெண் இழப்பு ஏற்படுகிறது . மேல் நிலையில் மொத்தம் 70 மதிப்பெண்களுடன் வருகிறது. இதில் 15 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி அளிக்கப்படுகிறது. ஆகவே 2 மதிப்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து எழு மதிப்பெண்களுக்கு பதிலாக ஐந்து மதிப்பெண்கள் வினாக்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே அறிவியல் பாடத்திலிருந்து வந்த பழைய வினாத்தாள் வடிவமைப்பு இருக்க வேண்டும்.

பழைய வினாத்தாளில்,

  • 1 மதிப்பெண் வினக்கள் 15=15
  • 2 மதிப்பெண் வினக்கள் 20=40
  • 5 மதிப்பெண் வினக்கள் 4=20 (3 பகுதிகள்) மொத்தம் 75 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப்பட்டிருக்கும் (இவ்வாறு இருக்கும் வினாத்தாள் வடிவமைப்பில் இரண்டு மதிப்பெண் வினாக்களின் பட்டியலில் படங்கள் சரியா, தவறா, கூற்று, காரணம், பொருத்துக போன்ற அனைத்து வினாக்களும் இடம் பெற்று இருக்கும்)

அறிவியல் வினாத்தாளில் அனைத்து பிரிவு வினாக்களிலும் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கு சம எண்ணிக்கையில் மதிப்பெண்கள் வழங்கி வினாத்தாள் தயாரிக்க வேண்டும். மெல்ல கற்கும் மாணவர்கள், சராசரியாக பயிலும் மாணவர்கள், மீத்திறன் மாணவர்கள் அனைவரையும் உள்ளடக்கி வினாத்தாள் தயாரிக்கப்பட வேண்டும், அனைத்து பாடங்களுக்கும் 10 மதிப்பெண்கள் அகமதிப்பீடு முறையில் வழங்கப்பட வேண்டும். இந்த மாற்றங்களை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Titanic Wreckage tour: சோகத்தில் முடிந்த சாகச பயணம் - நீர்மூழ்கி வெடித்து உயிரிழந்த கோடீஸ்வரர்கள்

ABOUT THE AUTHOR

...view details