தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநிலப் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், தமிழ்நாடு முதலைமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், ”கரோனா பாதிப்பு பரவலைத் தடுத்திட பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுவரும் முதலமைச்சருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவர்கள் நலன் கருதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதிக்குப் பிறகு மாற்றியமைத்தமைக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை வரை அறிவிக்கப்பட்டிருந்த மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தையும் முழு மனதோடு வரவேற்கிறோம். ஆனால் இக்கட்டான நிலையிலும் நாளை தேர்வெழுதும் மாணவர்களை கரோனா தாக்காமல் இருக்க பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்திலும் பெரும் மன உளைச்சலிலும் உள்ளார்கள்.