சென்னை: ஜாக்டோ-ஜியோ போராட்டக் காலத்தில் ஆசியரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்து, அவர்கள் முன்பு பணியாற்றிய பணியிடங்களிளேயே நியமிக்கப்பட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் அரசுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “ஆசிரியர், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 2019ஆம் ஆண்டின் ஜனவரி 22 முதல் 30ஆம் தேதி வரையில் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். அவ்வாறு மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களது பணியிட மாறுதலை ரத்து செய்து பழைய பணியிடத்திலேயே பணியாற்ற அனுமதி வழங்க வேண்டுமென பல்வேறு ஆசிரியர் அமைப்புக்கள் கோரிக்கை வைத்தது.