தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதை முன்னிட்டு கேரள, கர்நாடக மாநிலங்களில் மார்ச் 31ஆம் தேதி வரைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் பொதுநலன் கருதி கூட்டங்கள் பேரணிகள் தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சம்: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை!
சென்னை: கொரோனா வைரஸ் தாக்குதலைத் தவிர்க்க, மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியுள்ளார்.
கொரோனா பரவும் தீவிரத்தை அரசு உணர்ந்து, குழந்தைகள் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புகள் உள்ளது என்ற காரணத்தினாலும், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள காரணத்தினாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு அருகேயுள்ள மாநிலங்களில் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உணர்ந்து, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். கேரளாவில் மாணவர்களுக்கு மார்ச் 31ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், தேர்வுகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
பொதுத் தேர்வுகள் மட்டும் மாணவர்கள் வந்து எழுதி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, தமிழ்நாட்டில் பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அங்கன்வாடி முதல் 9ஆம் வகுப்பு வரையில் படிக்கும் குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு நடைபெறும் நாட்களில் மட்டும் வந்து தேர்வினை எழுதிச் செல்லலாம். அங்கன்வாடிகள் மழலையர் பள்ளிகள் போன்ற இடங்களிலும் குழந்தைகள் நெருக்கமாக இருப்பதால், கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, தமிழ்நாடு அரசு மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' என கூறியுள்ளார்.
இதையும் படிங்க:'மது அருந்துவதால் கொரோனா வைரஸ் குறையும் என்பது அபத்தம்!'